நீடிக்கும் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை எதிரொலியாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (12.2.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி அறிவித்துள்ளார். மேலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், தேர்வு நடைபெறும் பள்ளி மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றும் அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com