2வது திருமணம்...ரூ.25 லட்சம்...ஆசை வார்த்தையால் ஏமாந்த பெண்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2வது திருமணம்...ரூ.25 லட்சம்...ஆசை வார்த்தையால் ஏமாந்த பெண்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், 2-வது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 45 வயது பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே திருமணமாகி இரு மகள்கள் உள்ள அந்த பெண்ணை, இங்கிலாந்தில் வசிப்பதாக கூறிய ஒருவர் ‘பர்மடோ எரிக்’ என்ற பெயரில் தொடர்புகொண்டுள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் நெருக்கம் ஏற்பட, திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்துள்ளார்

பின்னர் நேரில் பார்க்க இங்கிலாந்திலிருந்து வந்துள்ளதாகவும், அதிக அளவில் தங்க கட்டிகளை கொண்டு வந்ததால் டெல்லி விமான நிலையத்தில் சிக்கியுள்ளதாகவும் கூறி, பல்வேறு காரணங்களை சொல்லி பல தவணைகளில் அந்த பெண்ணிடமிருந்து ரூ.25 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.

சந்தேகமடைந்த அந்த பெண் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், குற்றவாளி ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மற்றும் தகவல்கள் மூலம் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

Also Read
சுற்றுலா வேன் சாலை தடுப்பில் மோதி விபத்து; ஒருவர் பலி - 15 பேர் காயம்
2வது திருமணம்...ரூ.25 லட்சம்...ஆசை வார்த்தையால் ஏமாந்த பெண்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களை எளிதில் நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com