

பணகுடி,
பணகுடி அருகே விடுதியில் பெண்களை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 2 இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண்களை அடைத்து வைத்து விபசாரம் நடப்பதாக நேற்று முன்தினம் இரவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பணகுடி போலீசார் அந்த விடுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கேரள மாநிலம் மற்றும் கரூர் பகுதியைச் சேர்ந்த 2 இளம் பெண்களை அறையில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து 2 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இளம்பெண்களை அறையில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக, பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்த புரோக்கர் விவேக் ஆனந்தை (வயது 44) போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.