அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: 4 பேர் கைது... 6 இளம்பெண்கள் மீட்பு

வேலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: 4 பேர் கைது... 6 இளம்பெண்கள் மீட்பு
Published on

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி நேருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக அடுக்கம்பாறையை சேர்ந்த நிருபன் விஜய், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த அனீஸ், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த கவுதம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான விஜயகுமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து அங்கு 6 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர்கள் ஆந்திரா, சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com