ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் நேற்று வண்ணார்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் முத்துமாலை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லோகிதாசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்க மாநில அமைப்பாளர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். 80 வயதின் தொடக்கத்திலேயே கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் குமாரவேல், ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com