ஆர்எஸ்எஸ் பிள்ளைகள் என்பதில் பெருமை..மத்திய அமைச்சர் எல்.முருகன்

தேசத்தின் வளர்ச்சிக்காக தேசத்தின் சேவைக்காக செயல்படும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று எல்.முருகன் கூறினார்.
சென்னை,
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-“ஆர்.எஸ்.எஸ். பிள்ளைகளாக இருப்பது பெருமைதான். நூறு ஆண்டுகளை கடந்த ஒரு இயக்கம் அது. தேசத்தின் வளர்ச்சிக்காகவும், தேசத்தின் சேவைக்காகவும் செயல்படும் ஒரு இயக்கம் என்றால் அது ஆர்.எஸ்.எஸ். தான். நூறு ஆண்டுகளாக அந்த இயக்கம் பெருமையுடன் செயல்பட்டு வருகிறது.
பட்டியலின மக்களுக்காகவும், மலைவாழ் மக்களுக்காகவும் பல்வேறு பணிகளை செய்து வரும் மாபெரும் இயக்கமாக ஆர்.எஸ்.எஸ். உள்ளது. அந்த இயக்கத்தின் பிள்ளைகளாக இருப்பது பெருமைதான்” என்றார். சீமானும் விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பிள்ளைகள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கே எல். முருகன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
Related Tags :
Next Story






