தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை

தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது.

இந்தநிலையில், தொடர்மழையால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com