வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி அருகே இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் திட்டக்குடி அருகே பரபரப்பு
Published on

பெண்ணாடம்,

திட்டக்குடி அடுத்த கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த கொட்டாரம் கிராம பொதுமக்கள் இன்று காலை திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பஸ் நிறுத்தம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், தங்களுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் மதி மற்றும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com