காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் 13-ந்தேதி நடக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்
Published on

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 13-ந்தேதி காலை 10 மணிக்கு, காஞ்சீபுரம் வட்டத்தில் திருப்புட்குழி, உத்திரமேரூர் வட்டத்தில் தோட்டநாவல், வாலாஜாபாத் வட்டத்தில் புத்தகரம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஓ.எம்.மங்கலம், குன்றத்தூர் வட்டத்தில் ஒரத்தூர் போன்ற கிராமங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் ரேஷன்கார்டு, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய ரேஷன்கார்டுகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com