நாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது.
நாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. அதன்படி பெரம்பலூர் தாலுகாவுக்கு புதுநடுவலூர் கிராமத்தில் ஆர்.டி.ஓ. நிறைமதி தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகாவுக்கு திருவாளந்துறையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் தலைமையிலும், குன்னம் தாலுகாவுக்கு ஒதியத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகாவுக்கு கொளத்தூரில் உதவி ஆணையர் (கலால்) மனோகரன் தலைமையிலும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நடக்கிறது. மேற்படி முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com