

சென்னை ,
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த தின விழா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் 15.07.2026 அன்று ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்" என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்பான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒருங்கிணைப்பாளராக செங்கம் ஜி.குமார் அவர்கள் செயல்படுவார்.
கீழ்கண்ட இந்நாள் - முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாவட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.
1. ஏ.எம். முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ.,
2. டி.பி.ஜே. ராஜாபாபு, முன்னாள் எம்.எல்.ஏ.,
3. ஜி. சுரேஷ்குமார், தலைவர், வேலூர் மத்திய மாவட்டம்
4. வாஹித்பாஷா, தலைவர், வேலூர் மாநகர் மாவட்டம்
5. விஜய் இளஞ்செழியன் தலைவர், திருப்பத்தூர் மாவட்டம்
6. நரேஷ்குமார், தலைவர், ராணிப்பேட்டை மாவட்டம்
7. எம்.சி. ரகு, தலைவர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
8. ஜெ. பொன்னையன், தலைவர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
9. ஜெ. கிருஷ்ணவேணி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர்
10. பி. டீக்காராமன், முன்னாள் மாவட்டத் தலைவர், AICC உறுப்பினர்
11. சி. பஞ்சாட்சரம், முன்னாள் மாவட்டத் தலைவர்
12. ச. பிரபு, முன்னாள் மாவட்டத் தலைவர்
13. நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்
14. எல். சுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவர்
15. எம். வசந்தராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர்
16. பாலவரதன், முன்னாள் மாவட்டத் தலைவர்
17. டி.வி.எஸ். குப்புசாமி, ஐ.என்.டி.யு.சி. செயல் தலைவர்
18. ஜெ. அஸ்லம்பாஷா, சிறுபான்மைத்துறை முன்னாள் தலைவர்
19. எஸ்.என். காசிலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்
20. அகா. கிருஷ்ணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்
21. டி. ஏகம்பவாணன், மாநில பொதுச்செயலாளர்
22. அரக்கோணம் பி. ராஜ்குமார், மாநில பொதுச்செயலாளர்
23. ஜெ.எஸ். ஆறுமுகம், ஊத்தங்கரை முன்னாள் சேர்மன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.