ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் பணமோசடி மெசேஜ்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: நெல்லை காவல்துறை எச்சரிக்கை

தற்போது RTO Challan App என்ற பெயரில் வாட்ஸ் ஆப் மூலமாக பண மோசடி நடைபெற்று வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் பணமோசடி மெசேஜ்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: நெல்லை காவல்துறை எச்சரிக்கை
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது RTO Challan App (ஆர்.டி.ஓ. செல்லான் ஆப்) என்ற பெயரில் வாட்ஸ் ஆப் (Whatsapp) மூலமாக பண மோசடி நடைபெற்று வருகிறது. வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) குழுக்களில் (GROUP) உள்ள நபர்களின் எண்கள் மூலமாகவோ RTO Challan App-ஐ Apk file மூலம் உங்கள் வாகனத்திற்கு அபராததொகை (Fine amount) உடனே செலுத்த வேண்டும் என message வரும். அதை update செய்யவில்லை என்றால் உங்களது வாகனத்தின் ஆர்.சி. (R.C.) முடக்கப்பட்டுவிடும் என செய்தி இருக்கும்.

அதை உண்மையென நம்பி கிளிக் செய்துவிட்டால் உங்கள் வாட்ஸ்ஆப் ஆனது உடனே hack செய்யப்படும் மற்றும் உங்களது வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடியாக எடுக்கப்பட்டுவிடும். மேலும், இந்த ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் Apk file மெசேஜ் தானாகவே உங்கள் வாட்ஸ்ஆப் குரூப்களில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உங்களது மொபைல் எண்ணில் இருந்தே அனுப்பப்பட்டதாக உங்களுக்கு தெரியாமலே பகிரப்படும். இந்த ஆர்.டி.ஓ. செல்லான் ஆப்-ஐ டவுன்லோடு செய்தாலோ அல்லது கிளிக் செய்தாலோ வாட்ஸ்ஆப் நம்பரும் தொடர்ச்சியாக hack செய்யப்படும் மற்றும் மொபைல் போனில் உள்ள வங்கி கணக்கு தொடர்பான தரவுகளையும் hack செய்தும் பண மோசடி செய்வார்கள்.

இதே போன்று வாட்ஸ்ஆப் மூலமாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) உங்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள தெரிந்த நபர்களின் எண்ணிலோ RTO Challan App- fine amount எனவும், sbi bank, axis bank, union bank etc., ஆகிய வங்கிகளின் reward points எனவும் (அ) அரசாங்க நலதிட்ட உதவி, மானியம் என்று வரும் எந்த Apk file-களையும் உங்களது மொபைலில் பதிவிறக்கம் (INSTALL) செய்ய வேண்டாம்.

இது போன்று போலியான மெசேஜ்களை உடனே Delete செய்ய வேண்டும். காவல் துறையினரும் Fine Amount (தண்டனைத்தொகை) எதையும் கட்ட வேண்டும் என்று வாட்ஸ்ஆப் செயலி மூலமாக யாரும் கோர மாட்டார்கள். மேலும் காவல் துறையினர் எண்களிலிருந்தோ அல்லது காவல் துறையினர் போலவே போலியான அடையாளத்துடன் உள்ள வாட்ஸ்ஆப் கணக்குகள் மூலம் வரும் ஆர்.டி.ஓ. செல்லான் என வரும் குறுஞ்செய்திகளை எவரும் நம்ப வேண்டாம்.

இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்றால் அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ அல்லது சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com