கியாஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் - இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட் ரோல்-விநியோகமும் டீசல் முறையாக நடைபெற்று வருகிறது.
கியாஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் - இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்
Published on

சென்னை,

எண்ணெய் நிறுவனங்களின் (ஐ.ஓ.சி.எல்., பி.பி.சி. எல்., எச்.பி.சி.எல்.) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் வீட்டு உபயோக எல்பிஜி விநியோகம் தற்போது எந்தவித தடையும் இல்லாமல், முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் சார்பில், எல்பிஜி சிலிண்டர்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. விநி யோக ஏற்பாடுகள் வலுவாக உள்ளன.

எங்கள் நிரப்பும் ஆலைகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் விநியோக அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், பொதுமக்கள் தங்களுடைய வழக்கமான சுழற்சியில் எந்தவித சிரமமும் இன்றி பெற முடிகிறது. எனவே, தேவையற்ற கவலை கொள்ள வேண்டாம் என்றும், பீதியுடன் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட் ரோல்-விநியோகமும் டீசல் முறையாக நடைபெற்று வரு கிறது. அனைத்து முக்கிய முனையங்கள் மற்றும் கிடங்குகளிலும் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.

சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்கள் சீராக இயங்கி வருகிறது. எங்கும் பற்றாக்குறை ஏற்படாதவாறு எண்ணெய் தொழில் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வர்த்தக எல்பிஜி விநியோகத்தைப் பொறு த்தவரை, அரசு வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஒரு திட்டமிட்ட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், சுமார் 70 சதவீதம் அளவிற்கு மருத்துவனைகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள், சமுதாய சமையலறைகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவகங்கள் போன்ற அத்தியாவசிய மற்றும் முன்னுரிமைத் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com