குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் அவதி...!

மூன்று நாட்களில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது.
குடிநீர் குழாய் உடைந்தது
Published on

மதுரை,

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் சூழ்ந்ததால் பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் பெரும் அவதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேங்கடம் பள்ளிவாசல் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த குடிநீர் குழாய் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் வழியே செல்கிறது. இது கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் பெருகி கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் வேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் குழாய் உடைந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com