

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கும், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாகத் திட்டமிடுவதற்கும் முக்கியமான பணியாகும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தங்களது குடும்பம் இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை எனில், கீழே குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரை (Charge Officer) தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை சிறப்பாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளும் வகையில், கணக்கெடுப்பு அலுவலர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குத் தேவையான தகவல்களை வழங்குவது கட்டாயமாகும்.
மண்டலம் - மண்டலத்தின் பெயர் -தொடர்பு எண்
மண்டலம் – 1 திருவொற்றியூர் 9445190201
மண்டலம் – 2 மணலி 9445190202
மண்டலம் – 3 மாதவரம் 9445190203
மண்டலம் – 4 தண்டையார்பேட்டை 9445190204
மண்டலம் – 5 ராயபுரம் 9445190205
மண்டலம் – 6 திரு.வி.க. நகர் 9445190206
மண்டலம் – 7 அம்பத்தூர் 9445190207
மண்டலம் – 8 அண்ணா நகர் 9445190208
மண்டலம் – 9 தேனாம்பேட்டை 9445190209
மண்டலம் – 10 கோடம்பாக்கம் 9445190210
மண்டலம் – 11 வளசரவாக்கம் 9445190211
மண்டலம் – 12 ஆலந்தூர் 9445190212
மண்டலம் – 13 அடையாறு 9445190213
மண்டலம் – 14 பெருங்குடி 9445190214
மண்டலம் – 15 சோழிங்கநல்லூர் 9445190215
தலைமையிடம் 1913
எனவே, தங்களது குடும்பம் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால், மேற்கண்ட தொடர்பு எண்களில் சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.