கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வரும் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்பட தமிழக அரசு எடுத்து வரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பரவலின் வேகம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

  • லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் 3 நாட்களுக்குப் பிறகு, 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த பரிந்துரைக்கலாம்.
  • மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் 10 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யலாம்.
  • 2 வகையான நோயாளிகளுக்கும் உடல் நிலையை பொறுத்து மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com