புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்-முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்-முதல்வர் நாராயணசாமி
Published on

புதுவை,

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று சட்டப்பேரவை கூட்டம் மரத்தடியில் சுமார் 2.15 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com