புதுக்கோட்டை: நடைபயிற்சியின்போது வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை: நடைபயிற்சியின்போது வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

புதுக்கோட்டை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அவர் இன்று காலை புதுக்கோட்டை இலுப்பூரில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், யார் என்ன செய்தாலும் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றிபெறும்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com