கோவில்பட்டி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

கோவில்பட்டி நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது.
கோவில்பட்டி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
Published on

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி சுபா நகர் நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுப்ரபாதம், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது.

இதனை தொடர்ந்து நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாளுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com