அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா

அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
Published on

அறந்தாங்கி அருகே காயக்காடு கிராமத்தில் பூரண புஷ்கலாம்பிகை அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் 88 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து துவரடிமனையில் உள்ள குயவர் தெருவில் மண்ணால் செய்யப்பட்ட மதளை சிலைகளை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் சுமந்து கொண்டும், கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குதிரை, யானை, காளை, கருப்பசாமி போன்ற மண்ணினால் செய்த சிலைகளை சுமந்து கொண்டும் மேள தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com