காலாண்டு விடுமுறை நிறைவு.. தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு

காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
காலாண்டு விடுமுறை நிறைவு.. தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது. அக்டோபர் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்றுக்கொண்ட அரசு, காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6-ந் தேதி (அதாவது நேற்று) வரை நீடித்தது. அதன்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.

விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்கவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com