மனோன்மணியம் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு: வினாத்தாள் கசிந்ததா?

'இண்டஸ்ட்ரியல் லா' தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வந்த தகவலை அடுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு: வினாத்தாள் கசிந்ததா?
Published on

நெல்லை,

தென் மாவட்டங்களில் முக்கியமான பல்கலைக் கழகமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று "இன்டஸ்ட்ரியல் லா" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென "இன்டஸ்ட்ரியல் லா" பாடத் தேர்வு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மனோன்மணியம் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிந்ததால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இன்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வுக்காக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது. மேலும் எப்படி இந்த வினாத்தாள் கசிந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கு மாணவ மாணவிகள் தயாராகி வந்த நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com