தேசிய அறிவியல் தினத்தையொட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் வினாடி வினா போட்டி

5 அணிகள் பங்கேற்ற வினாடி வினா போட்டியில், சர் சி.வி.ராமன் அணி வெற்றி பெற்றது.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் வினாடி வினா போட்டி
Published on

சென்னை,

சென்னையை அடுத்த புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினமான இன்று வினாடி வினா போட்டி, அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 5 அணிகள் பங்கேற்ற வினாடி வினா போட்டியில், சர் சி.வி.ராமன் அணி வெற்றி பெற்றது. அறிவியல் கண்காட்சியில், சுமார் 50 மாணவ-மாணவிகள் வடிவமைத்த பொருட்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில், சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச் செயலாளர் செல்வக்குமார், பள்ளி முதல்வர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியைகள் பிரவீணா, பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com