வெறிநோய் தடுப்பூசி முகாம்

லத்தேரியில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வெறிநோய் தடுப்பூசி முகாம்
Published on

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் ஜெயாமுருகேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மோகன் வரவேற்றார். கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் லத்தேரி தி.ரஞ்சித்விமல்ராஜ், வடுகந்தாங்கல் சி.பிரவீன்குமார் காளாம்பட்டு செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இதில் கலந்து கொண்டு 135 செல்லப்பிராணிகளைப் பரிசோதனை செய்து, தடுப்பூசி செலுத்தினர். முடிவில் ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com