ஆற்காடு அருகே சோகம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுமிகள் குளத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆற்காடு அருகே சோகம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள்கள் யுவஸ்ரீ (வயது 13), பிரியங்கா (12). அதேபோல, வெங்கடேசன் என்பவரின் மகள் பிரியா (12) . இந்த மூன்று சிறுமிகளும் அங்குள்ள குளம் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களை காப்பாற்ற மேலும் இரண்டு சிறுமிகள் முயன்ற போது அவர்களும் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் யுவஸ்ரீ மற்றும் பிரியங்காவின் உடல்களை மீட்டனர். சிறுமி பிரியாவின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுமிகள் குளத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நெஞ்சை உறைய வைக்கும் இந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com