

திருச்சி,
முதல்-அமைச்சர்விஜய்தான் அடுத்த பிரதமர் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளிவருவது குறித்து காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பதிலளித்துப் பேசியதாவது,
காங்கிரசை பொருத்தவரையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான், 2029-ல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.
கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமராவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்த குரலில் பணியாற்றுவோம் என்றார்.