தண்டவாள சீரமைப்பு பணிகள்: பாலக்காடு, நாகர்கோவில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக பாலக்காடு, நாகர்கோவில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தண்டவாள சீரமைப்பு பணிகள்: பாலக்காடு, நாகர்கோவில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
Published on

சென்னை,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு, திருப்பூர் ரெயில் பிரிவில் அமைந்துள்ள ஊத்துக்குளி ரெயில்வே யார்டில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் காரணமாக, ரெயில் சேவைகளில் பின்வருமாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

திருச்சியில் இருந்து பகல் 1 மணிக்கு புறப்படும் (ரெயில் எண் 16843) திருச்சி-பாலக்காடு விரைவு ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை), 10-ந் தேதி ஆகிய நாட்களில் ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் ரெயில் நிலையத்தில் பாதியிலேயே நிறுத்தப்படும்.

பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்த ரெயில் ஈங்கூரிலிருந்து திருச்சி-பாலக்காடு டவுன் வரை, இந்த ரெயில் அதே நிறுத்தங்களுடன், முன்பதிவற்ற சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். நாகர்கோவில் சந்திப்பில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் (ரெயில் எண்: 16321) நாகர்கோவில்-கோவை விரைவு ரெயில், 10-ந் தேதி அன்று ஈரோடு சந்திப்பு ரெயில் நிலையத்தில் பாதியிலேயே நிறுத்தப்படும்.

பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்த ரெயில் ஈரோடு சந்திப்பில் இருந்து கோவை சந்திப்பு வரை வழக்கம்போல் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com