விருத்தாசலம் அருகே மழை வெள்ளம்... வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதி!

அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியேச் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மழை வெள்ளம்
Published on: 

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே விடிய விடிய பெய்த கனமழையால் ஊ.கொளப்பாக்கம் கிராமத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில் மழைநீர் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவதி

வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், வெளியே செல்வதற்கும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்வதற்கும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மழைநீர் தேங்கியிருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, கிராமத்தில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றவும், பொதுமக்களின் பாதிப்புகளைச் சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com