மழையால் சேதமடைந்த சாலைகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

விளாத்திகுளம் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
மழையால் சேதமடைந்த சாலைகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
Published on

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விளாத்திகுளம் 1-வது வார்டு சத்யா நகர் முதல் சித்தவ நாயக்கன்பட்டி செல்லும் சாலை சேதமடைந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், சேதம் அடைந்த சாலையை பார்வையிட்டு விரைவில் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், சித்தவநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகரன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com