தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் கரூர்,திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. தற்போதுதான் சென்னையில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையில் பெய்த இந்த திடீர் மழையால் மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com