கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு
Published on: 

சென்னை,

கோடம்பாக்கம் மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஆணையாளர் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், கோடம்பாக்கம் மண்டலத்தில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று (08.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட ஆற்காடு சாலை, காளியம்மன் கோவில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் முக்கிய நீர் வெளியேற்றப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

இதனைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையில் சி.எம்.டி.ஏ (CMDA) சார்பில் மேற்கொண்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மற்றும் கூவம் ஆற்றில் நீர் வெளியேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் Cut and Cover முறையிலான வடிகால் பணிகள் ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, தூர்வாரும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com