

சென்னை,
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், பராமரிக்கவும் தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மொட்டை மாடி மழைநீரைச் சேகரிக்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் நீர் உறிஞ்சும் குளங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும். இப்பணிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
உள்ளாட்சி நிதி, சமூகப் பொறுப்பு நிதி அல்லது அரசு மானியங்கள் மூலம் இதற்கான செலவுகளை மேற்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மழைநீர் சேகரிப்பு முறைகள்
தனி வீடுகள்
சேகரிப்பு: கூரை மேல் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் சேகரித்து, வடிகட்டி (Filter unit) வழியாக சேமிப்பு தொட்டியில் சேமிக்கலாம்.
நிலத்தடி நீர் செறிவூட்டல்: உபரி நீரை திறந்த கிணறு அல்லது ஆழ்துளை கிணற்றில் விடலாம்.
கிணறு இல்லாத பட்சத்தில்: மணற்பாங்கான நிலத்திற்கு ஊடுருவுதல் / கசிவு குழி
அடுக்குமாடி குடியிருப்புகள்
சேகரிப்பு: கூரை மழைநீரை குழாய்கள் மற்றும் வடிகட்டி மூலம், சேமிப்பு தொட்டி / தீயணைப்பு தொட்டியில் சேமிக்கலாம்.
உபரி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் வெளியேற்றம்: மணற்பாங்கான លក់ it (Recharge trenches) அல்லது செறிவூட்டும் கிணறுகள் (Recharge wells) மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டலாம்.
சேகரிப்பு: கூரை நீரை வடிகட்டி மூலம் சேமிப்பு தொட்டிகள் / தீயணைப்பு தொட்டிகளில் சேமிக்கலாம்.
உபரி நீர் மேலாண்மை: மணற்பாங்கான நிலங்களில் செறிவூட்டும் கிணறுகள் அல்லது அகழிகள் மூலமும், களிமண் நிலங்களில் துளையுடன் கூடிய ஊடுருவும் அகழிகள் மூலமும் சுற்றிலும் திருப்பி விடலாம்.
நிறுவன வளாகங்களில் தாழ்வான பகுதிகள்: தகுந்த இடவசதி இருக்கும் பட்சத்தில், நிலத்தடி நீரை செறிவூட்ட தகுந்த அளவில் கசிவு குளங்கள் (percolation ponds) அமைக்கலாம்.
சாலைகள்: சாலைகளில் சேரும் மேற்பரப்பு நீரை செறிவூட்டும் கிணறுகள் மற்றும் வடிகட்டிகள் (Filter strips) மூலம் நிலத்தடி நீராக மாற்றலாம்.
திறந்த மற்றும் காலியான பகுதிகள்: ஊடுருவும் கிணறுகள், சேமிப்புடன் கூடிய கசிவு குளங்கள், தண்ணீர் ஊடுருவும் குழிகள், வடிகட்டிகள், ஊடுருவக்கூடிய நடைபாதை கற்கள் (Permeable pavers), செறிவூட்டும் கிணற்றுடன் கூடிய அகழி மற்றும் Sponge park போன்ற கட்டமைப்புகள் மூலம் மழைநீரை சேகரிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.