

புதுச்சேரி,
நடிகா ரஜினிகாந்த் துக்ளக் விழாவின் போது பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயாநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இது பற்றி கூறியதாவது;-
ரஜினிகாந்த் அவர்கள் விழா ஒன்றில் பேசும்போது பெரியார் பற்றி விமர்சனம் செய்துள்ளார். உண்மையாக அந்த சம்பவம் நடந்ததா என ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். சில தகவல்களை வைத்து தந்தை பெரியாரையும், திராவிடக் கழகத்தையும் பேசி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பேசியிருப்பது வருத்தத்திற்குரியது. அவர் கருத்தை திரும்பப் பெற்று இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.