இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாஸை நலம் விசாரித்த ரஜினிகாந்த்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக டாக்டர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாஸை நலம் விசாரித்த ரஜினிகாந்த்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதைதொடர்ந்து அவர் டாக்டர்களின் ஆலோசனையின்படி மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புவார் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி கூறியுள்ளது.

இதற்கிடையே டாக்டர் ராமதாசை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது உடல்நிலை குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று தனது விருப்பத்தை அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்தார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த், ராமதாஸை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com