ராமநாதபுரம்: மரத்தில் வேன் மோதி ஓட்டுனர் உயிரிழப்பு; 23 பேர் காயம்

ராமநாதபுரத்தில் மரத்தின் மீது வேன் மோதியதில் அதன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
ராமநாதபுரம்: மரத்தில் வேன் மோதி ஓட்டுனர் உயிரிழப்பு; 23 பேர் காயம்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் உச்சிப்புளி பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில், வேன் ஓட்டுனர் நவநீதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். விபத்தில் சிக்கிய 23 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com