ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
Published on

ராமேசுவரம் 

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன் தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர்.

மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் நேற்று காலை கரை திரும்பினார்கள். ஆனால் இலங்கை கடற்படை விரட்டியடிப்பு சம்பவம் குறித்து மீனவர்கள் யாரும் மீன் துறை அலுவலகத்தில் எந்த ஒரு புகாரும் தெரிவிக்கவில்லை. 

X

Daily Thanthi
www.dailythanthi.com