ராமேசுவரம் மீனவர்களுக்கு வருகிற 27ந்தேதி வரை சிறை; உறவினர்கள் அதிர்ச்சி

இலங்கை சிறையில் வாடும் ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரை பொங்கலுக்கு விடுவிக்காமல் ஜனவரி 27ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீனவர்களுக்கு வருகிற 27ந்தேதி வரை சிறை; உறவினர்கள் அதிர்ச்சி
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து டிசம்பர் 19ந்தேதி மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் அந்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 3வது முறையாக நீதிமன்ற வாய்தா நாளான நேற்று 43 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்கள் விடுவிக்கப்பட்டு குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் அவர்களின் காவலை நீட்டித்து ஜனவரி 27ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மீனவர் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com