நாளை ரேஷன் கடைகள் இயங்கும்: உணவு வழங்கல் துறை அறிவிப்பு

நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பதிலாக, வரும் நவம்பர் 21-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு ஈடுசெய்யும் விடுமுறை அளிக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
நாளை ரேஷன் கடைகள் இயங்கும்: உணவு வழங்கல் துறை அறிவிப்பு
ரேஷன் கடைகள்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறை

பொதுவாக, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை மறுநாள் ஆயுதபூஜை மற்றும் அதனை தொடர்ந்து விஜயதசமி பண்டிகைகள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன.

இதனால் அடுத்தடுத்து தொடர் விடுமுறை தினங்கள் வருவதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படக் கூடும் என கருதப்பட்டது.

நாளை ரேஷன் கடைகள் இயங்கும்

இதனை தொடர்ந்து, பண்டிகை காலங்களில் குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித தடையுமின்றி பொருட்களை வாங்க ஏதுவாக, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21-ஆம் தேதி

மேலும், நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பதிலாக, வரும் நவம்பர் 21-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு ஈடுசெய்யும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் உணவு வழங்கல் துறை ஆணையர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் தங்களது ரேஷன் பொருட்களை சிரமமின்றி பெற்று கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com