சிறார்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து - அமல் ஆவதில் தாமதம்

போக்குவரத்துத்துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.
RC will be canceled if minors are driving
Published on

சென்னை,

தமிழகத்தில் சமீப காலமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் வாகனம் ஓட்டுவதால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்து குறையவில்லை.

இதனால் 18 வயது பூர்த்தியடையாத சிறார்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும். மேலும் வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாகனத்தின் ஆர்.சி. ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு இந்த நடைமுறை அமலுக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com