கடந்த மாதம் ரூ.12 ஆயிரத்து 290 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

வெளிநாட்டு ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி வருவதை தெளிவுபடுத்தி உள்ளது.
கடந்த மாதம் ரூ.12 ஆயிரத்து 290 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
Published on: 

திருப்பூர்,

இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த மாதம் அதிகரித்தது. இது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 1,286 மில்லியன் டாலர் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் 1,069 மில்லியன் டாலர் நடந்துள்ளது. இது 20.3 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சியாகும்.

இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த மாதம் ரூ.12 ஆயிரத்து 289 கோடியே 90 லட்சத்துக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய் யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் ரூ.9 ஆயிரத்து 455 கோடியே 10 லட்சத்துக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 29.98 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சியை எட்டி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதமும் 23 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சி பெற்றிருந்த நிலையில் கடந்த மாதமும் ஏற்றுமதி உயர்ந்துள்ளது, வெளிநாட்டு ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி வருவதை தெளிவுபடுத்தி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ரூ.81 ஆயிரத்து 590 கோடியே 50 லட்சத்துக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.76 ஆயிரத்து 456 கோடியை 70 லட்சத்துக்கு நடந்தது. இது 6.71 சதவீத வளர்ச்சியாகும். இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் (ஏ.இ.பி.சி) கூறும்போது, அதிகரித்து வரும் ஆர்டருக்கு ஏற்ப தொழிலாளர்கள் கிடைப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தொழிலாளர்களை வரவழைப்பது மற்றும் ஆதரவு திட்டங்களை செயல்படுத்துவது முக்கியமாகும்.

அதன் மூலமாகவே ஆர்டர்களை அதிகம் பெற்று ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். டெல்லியில் நடைபெற உள்ள 'பாரத் டெக்ஸ் 27' கண்காட்சி இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி மற்றும் ஆடை தொழில் துறையினருக்கான சர்வதேச வர்த்தக மையமாக அமையும் என்றார்.

X