234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்: தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

234 தொகுதிகளிலும் போட்டியிட தயார் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியில் கூறியுள்ளார்.
234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்: தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தனித்து போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது, பிரசார பணிகளுக்கு தயாராவது உள்ளிட்ட உயர்மட்ட வியூகங்களை வகுப்பதில் கட்சிகள் முனைப்புடன் உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தமிழக சட்டசபைக்கான 234 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்.

ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் செயற்குழு கூட்டம் கூட்டப்படும். அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com