முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.13.32 கோடி நன்கொடை வரவு

முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13.32 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.
முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.13.32 கோடி நன்கொடை வரவு
Published on

சென்னை,

கஜா புயல் கடந்த 16ந்தேதி அன்று நாகப்பட்டினம் அருகே கரையை கடந்து கடலோர மாவட்டங்களில் பெருத்த சேதத்தினை உண்டாக்கியது.

தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் உயிர்ச்சேதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டது. இருந்தபோதிலும், புயலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் படகுகள், மரங்கள், பயிர்கள், குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

மின்சார கட்டமைப்புகள் 24,941 பணியாளர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை பேணுவதற்காக சிறப்பு மருத்துவ குழுக்கள் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக, பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com