மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2 வட மாநிலத்தவர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2 வட மாநிலத்தவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2 வட மாநிலத்தவர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து கொண்டிருப்பவர்களை போலீசார் மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இதில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி பெரம்பலூர் தீரன் நகர் பஸ் நிறுத்தம் அருகேயும், இதே போல் கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகேயும் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த 2 ஆண் நபர்களை போலீசார் மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு பராமரிப்பின் போது அளிக்கப்பட்ட சிகிச்சையில் 2 பேரும் குணமடைந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், ஒருவர் பீகார் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த சுக்தேவ் ராமின் மகன் ராகுல் (வயது 24) என்பதும், மற்றொருவர் ஆந்திரா மாநிலம், போரம்பலிமை சேர்ந்த லட்சுமி நாராயணன் (40) என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களது உறவினர்கள் கண்டறியப்பட்டு பெரம்பலூர் வரவழைக்கப்பட்டு, மாற்றுத்தினாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார், போலீசார் முன்னிலையில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com