மாயமான தொழிலாளி பிணமாக மீட்பு

மாயமான தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
மாயமான தொழிலாளி பிணமாக மீட்பு
Published on

சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமர் (வயது 45). இவர் முடி திருத்தும் தொழிலாளி. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ராமரை பல இடங்களில் தேடினர். அவரைப்பற்றி தகவல் கிடைக்காத நிலையில் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு கழிவுநீர் ஓடையில் ஆண் பிணம் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கழிவுநீர் வாருகாலில் பிணமாக கிடந்தது ராமர் என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com