ரெட் அலெர்ட் எச்சரிக்கை: நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

ரெட் அலெர்ட் எச்சரிக்கை தொடர்ந்து நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலெர்ட் எச்சரிக்கை: நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

சென்னை,

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், நீலகிரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை, பேரிடர் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி, 0423-2450034, 24500335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 9488700588 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மழை பாதிப்பை தெரியப்படுத்தலாம். கோட்ட வாரியாக ஊட்டி 0423-244 5577, குன்னூர் 220 6002, ஊட்டி 244 2433 என்ற் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com