நெல்லை, பொதிகை விரைவு ரெயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி குறைப்பு

இதற்கு பதிலாக மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் எண்ணிக்கை 5-ல் இருந்து 6 ஆக அதிகரிக்க உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரெயில்களாக நெல்லை, பொதிகை அதி விரைவு ரெயில்கள் உள்ளன. நெல்லை அதி விரைவு ரெயில் தினசரி சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது. இதுபோல, சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே பொதிகை விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயிலில் (வண்டி எண்: 12632) ஆகஸ்ட் 1ம் தேதி முதலும், சென்னையில் இருந்து புறப்படும் ரெயிலில் (12631) ஆகஸ்ட் 4ம் தேதி முதலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த ரெயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 8ல் இருந்து 7ஆக குறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி சேர்க்கப்படவுள்ளது. இதன் மூலமாக, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் எண்ணிக்கை 5-ல் இருந்து 6 ஆக அதிகரிக்க உள்ளது.

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி இயக்கப்படும் அதிவேக ரெயிலில் (12661) வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் புறப்படும் பொதிகை ரெயிலில் (12662) இதேபோல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com