குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்த்திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு
Published on

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com