'ரீல்ஸ்' மோகத்தால் எல்லை மீறும் சம்பவம்: கஞ்சா புகைப்பது போன்று 'இன்ஸ்டாகிராமில்' வீடியோ பதிவிட்ட வாலிபர்கள்

'ரீல்ஸ்' மோகத்தால் எல்லை மீறும் சம்பவம்: கஞ்சா புகைப்பது போன்று 'இன்ஸ்டாகிராமில்' வீடியோ பதிவிட்ட வாலிபர்கள்

வாலிபர்கள் பதிவிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on

பழனி,

பழனியில் வாலிபர்கள் 5 பேர் கஞ்சா புகைப்பது போன்று 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் வாலிபர் ஒருவர், தனது கையில் கஞ்சாவை வைத்து கசக்குகிறார். பின்னர் அதை பீடியில் வைத்து சுருட்டி புகைபிடிக்க நெருப்பை பற்ற வைத்து அதை புகைக்கிறார். இதனையடுத்து அவருடன் சேர்ந்து, அவரது நண்பர்களும் கஞ்சாவை புகைக்கின்றனர். சிறிது நேரத்தில் முதலில் புகைத்தவர் போதையில் மயங்கி கீழே சாய்ந்து விழுகிறார். அதையடுத்து அவரது நண்பர்கள் 4 பேர் அவரை தூக்கி செல்வது போன்று பதிவாகி உள்ளது.

இதுபற்றி பழனி போலீசார் கூறுகையில், 'இன்ஸ்டாகிராமில்' வீடியோ பதிவிட்ட வாலிபர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் புகைத்தது கஞ்சா தான் என்றால், அவர்களுக்கு யாரிடம் இருந்து கிடைத்தது என்பது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com