விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்

விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்.
விபத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலி: தலைமறைவான வேன் டிரைவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்
Published on

திண்டுக்கல்,

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் (வயது56) கடந்த 22-ந்தேதி அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை தொடர்ந்து தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கரூரை அடுத்த குன்னுடையகவுண்டன்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ் (29) என்பவர் திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு லலிதாராணி முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து சுரேசை, வருகிற 30-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும், அதன்பிறகு கரூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் மாஜிஸ்திரேட்டு லலிதாராணி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் சுரேஷ் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com