இடமாற்றம் செய்த பாவூர்சத்திரம் மின்வாரிய அலுவலகம்: மேற்பார்வை பொறியாளர் திறந்து வைத்தார்

தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட பாவூர்சத்திரம் பிரிவு அலுவலகம் நிர்வாக காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட பாவூர்சத்திரம் பிரிவு அலுவலகம் நிர்வாக காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட பாவூர்சத்திரம் பிரிவு அலுவலகத்தை நேற்று திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த புதிய அலுவலகமானது கதவு எண்: 13/155, வாப்பா ஸ்டோர் எதிர்ப்புறம், செல்வ விநாயகபுரம், கல்லூரணி கிராமத்தில் இன்று (31-7-2025) முதல் செயல்பட தொடங்கும். பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான பாவூர்சத்திரம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த புதிய அலுவலகத்திற்கு வந்து பயன்பெறலாம். புதிய பிரிவு அலுவலக திறப்பு விழாவில் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, செயற்பொறியாளர் தென்காசி கோட்டம் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம், உதவி செயற்பொறியாளர் மக்கள் தொடர்பு அலுவலர் சங்கர், உதவி சுரண்டை உபகோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீவனஜா, உதவி மின் பொறியாளர்கள் முகமதுஉசேன், எடிசன், பிரேம்ஆனந்த், அனு, ஸ்ரீதர், சண்முகவேல், விக்னேஷ், ரகுநாதன் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






